அனைத்து அரசுப்பணி மாற்றுத் திறனாளிகள் முதலாவது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சீனிவாசன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சந்த்ர குமார், செயலாளர் ராமசாமி, செயற்குழு உறுப்பினர் கருப்பையா, இணைச் செயலாளர் ரேமாரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொல்.திருமாவளவன், இளங்கோவன், சமூகநல வாரியத் தலைவர் கவிஞர். சல்மா ஆகியோர் சங்கத்தின் தீர்மானங்களை ஆதரித்துப் பேசினர். தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சிதம்பரநாதன், பொதுச் செயலாளர் சிம்மச்சந்திரன், துணைத்தலைவர் தீபக், துணைச்செயலாளர் முஸ்தபா, லலிதாம்பிகை, நலவாரிய உறுப்பினர் தங்கம், மகளிரணி அமைப்பாளர் அருணாதேவி ஆகியோர் விளக்க உரை ஆற்றினர். துணைத்தலைவர் பூபதி மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழகம் முழுவதம் தமிழக முதல்வர் வழங்கிவரும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்க உரையாற்றிப் பாராட்டிப் பேடினார். மாநில துணைத் தலைவர் அண்ணாத்துரை உட்பட பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டுத் தீர்மானங்களை செயலாளர் ராமசாமி வாசித்தார். திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன், செயலாளர் மாரிக்கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர். இணைச்செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோரிக்கைத் தீர்மானங்கள்
* சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத் திறனளிகளுக்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் பணி வழங்கவேண்டும்,
* வேலைவாய்ப்பு பெற இயலாத மாற்றுத் திறனாளிகளின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
* தொகுப்பூதிய அடிப்படையில் குறிப்பாக டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதிக்கேற்ப பிற துறைகளில் உள்ள காலி இடங்களில் நிரந்தரப் பணி வழங்க வேண்டும்.
* பதவி உயர்வு அல்லது இடமாறுதலின்போது வசிப்பிடத்திற்கு அருகிலேயே பணிபுரிய ஆணை வழங்கவேண்டும்.
* குறைந்த வட்டியில் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன்ங்களை வாங்குவதற்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வசதி செய்துதர வேண்டும்.
* அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய தடையற்ற சூழலையும், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.
* மத்திய அரசுக்கு இணையான போக்குவரத்துப் படியை வழங்குவதோடு முழுமையான ஓய்வூதியத்திற்கான பணியின் காலவரம்பை ௨0 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும்.
* தொழில்வரி, வருமானவரி விலக்குப்பெற மாற்றுத்திறனாளிகளின் தேசிய அடையாள அட்டையையே மருத்துவச் சான்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* போக்குவரத்துக் கழகங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலகுவான பணிகளை செய்திட வாய்ப்பு வழங்கிட வேண்டும்.
* மாற்றுத் திறன்படைத்த பணியாளர்கள் காலை நேரத்தில் பணிக்கு வரும்பொழுது வாகன நெரிசலால் ஏற்படும் இடையூரினை மனதில் கொண்டு பணிக்கு வரும் நேரத்தில் 15 நிமிடங்கள் தாமதமாக வர சலுகை வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மாநாட்டு ஏற்பாடுகளை காமராஜ், சங்கீதா மற்றும் செய்திருந்தனர்.

0 comments:
Post a Comment