அழகப்பா பல்கலைக்கழக கல்வி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் ரத்து

தூத்துக்குடி, ஜூலை 6: அழகப்பா பல்கலைக்கழக தூத்துக்குடி கல்வி மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


 இது தொடர்பாக இக்கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பி. கதிரேசபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 தூத்துக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக கல்வி மையத்தில் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.   இப்பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்திற்கு இணையாக அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளான பி.ஏ. (வரலாறு, பொது நிர்வாகம்), பி.பி.ஏ., பி.லிட்., பி.காம்., பி.சி.ஏ., பி.எஸ்ஸி. (கணிதம், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்) போன்ற படிப்புகளுக்கும், முதுகலை படிப்புகளான எம்.ஏ. (தமிழ், ஆங்கிலம், வரலாறு), எம்.காம்., எம்.எஸ்ஸி., எம்.பி.ஏ., போன்ற படிப்புகளுக்கும் தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.  இங்கு மாற்றுத் திறனாளிகளுக்கு கல்விக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.  பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் தூத்துக்குடியில் நடைபெறுகிறது என்றார் அவர்.

0 comments:

Post a Comment

Powered By Blogger
Powered by Blogger.

Followers