xxx

Read more

AdSense for Games

Read more

சென்னையில் டிச.1ம் தேதி மாநில போட்டிக்கு மாற்றுத் திறனாளிகள் தேர்வு

திருநெல்வேலி : மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பாளையில் நடந்தது. பாளை காது கேளோதோர் பள்ளியில் நேற்று காலையில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதனை செஞ்சிலுவை சங்கம் பிரபாகர் துவக்கி வைத்தார். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மனோகர் வரவேற்றார். இதில்
அனவரதநல்லூர் ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்ல நிர்வாகி டாக்டர் கருணா செல்லையா, புறநகர் ரோட்டரி சங்க தலைவர் நயினா முகம்மது, ஐ.ஓ.பி ராமசாமி, காது கேளோதோர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திர மோகன், பார்வையற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர் கிங்ஸ்டன், புனித அன்னாள் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி தலைமை ஆசிரியர் சபீனா, மாற்றுத் திறனாளிகள் அமைப்புகளின் நிர்வாகிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


போட்டியில் ஓட்டப் பந்தயம், டிரை சைக்கிள், வீல் சேர், பார்வையற்றோருக்கான ஓட்டப் பந்தயம் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் கை, கால் ஊனமுற்றோர், செவித்திறன் குறைவுற்றோர், பார்வையற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் உட்பட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
Read more

ஊனம் என்பது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடையாக இருக்க கூடாது."

திருத்தணி : இரு கைகள் இல்லாத பெண் ஒருவர், தனக்கு தேவையான அனைத்து வேலைகளை தானே செய்துக் கொள்வதுடன், தந்தைக்கு உதவியாக ஓட்டல் தொழிலிலும் ஈடுபடுகிறார்.

மனிதனுக்கு ஊனம் என்றால், வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டும். இவர்கள் பெற்றோருக்கு பாரம் என சிலர் நினைக்கின்றனர். ஊனமுற்றவர்கள் உயிருடன் இருப்பதை விட இறப்பதே மேல் என, உறவினர்கள் நினைக்கும் இந்த காலத்தில் இரு கைகளை இழந்த ஒரு பெண் பெற்றோருக்கும் உதவியாக வேலை செய்கிறார்
.இந்த இளம்பெண்ணின் பெயர் பரமேஸ்வரி(28). இவர் ஐந்தாவது வரை படித்துள்ளார். பிறவிலேயே இரு கைகள் இல்லை. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் குருவப்ப நாயுடு கண்டிகையில் பிறந்த இவருடைய தந்தை பெயர் மணிவேல்; தாய் ஹெலன்.இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள். மூன்று பெண்கள், 2 ஆண்கள். இதில் மூத்தபெண் பரமேஸ்வரி.
மணிவேல் கே.ஜி.கண்டிகை பஜாரில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அடுப்பு எரிப்பது, காய்கறி வெட்டி கொடுப்பது, பாத்திரங்கள் தேய்ப்பது உள்பட பல்வேறு பணிகளை பரமேஸ்வரி கால்களால் செய்கிறார்.இது தவிர வீட்டில் துணி துவைப்பது, தலைவாரி பூ முடிப்பது,கேஸ் அடுப்பு பற்ற வைப்பது, புத்தகம் படிப்பது, எழுதுவது, மொபைல் போன் பேசுவது உட்பட, அனைத்து வேலைகளையும் அவரே இரு கால்களால் செய்து கொள்கிறார்.
இது குறித்து பரமேஸ்வரி கூறியதாவது: "ஊனம் என்பது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடையாக இருக்க கூடாது. ஊனமாக பிறந்துவிட்டோமே என்று கவலைப்படாமல், மனத் தைரியத்துடன் செயல்பட வேண்டும். நாம் மற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல், நம்முடைய வேலைகளை நாமே செய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.அதே போல் பெற்றோருக்கு நம்மால் முடிந்த உதவிகளையும் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சிலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனமான செயல். ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் தனித் திறமை உள்ளது. அதை தைரியத்துடன் செயல்படுத்தினால், நினைத்ததை சாதித்து காட்டலாம்.எனக்கு இரு கைகள் இல்லை என்றாலும், அனைத்து வேலைகளையும் நானே செய்துக் கொள்ளும் திறமை என்னிடம் உள்ளது. ஆகையால், தமிழக அரசு எனக்கு கடை வைப்பதற்கு நிதியுதவி வழங்கினால், நான் கடை வைத்து அதில் திறம்பட வியாபாரம் செய்து வாழ்க்கையில் முன்னேறி காட்டுவேன்.இவ்வாறு பரமேஸ்வரி கூறினார்.

இரு கைகளும், ஆரோக்கியமும், வாய்ப்பும், வசதிகளும் இருந்தும் சோம்பேறிகளாக சுற்றி வருபவர்கள் இடையே, இரு கைகளும் இல்லாமல் வாழ்க்கையில் போராடிவரும் பெண்ணை பார்த்து அப்பகுதி மக்கள் வியக்கின்றனர்.
Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு இப்போது ஒரே வாரத்தில் சான்றிதழ்

மாற்றுத் திறனாளிகளுக்கு இப்போது ஒரே வாரத்தில் சான்றிதழ் அளிக்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் திங்கள்கிழமை மத்திய சமூக நீதி இணை அமைச்சர் நெப்போலியன் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருந்தது: மாற்றுத்திறனாளிகளின் நிலைமையை உணர்ந்து அவர்கள் சான்றிதழை பெறுவதற்கான நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த 1996-ம் ஆண்டு விதிமுறை கடந்த ஆண்டே திருத்தி அமைக்கப்பட்டுள்ளது
.
உடலில் வெளிப்படையாகத் தெரியும் ஊனம் என்றால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார மையங்களில் பணிபுரியும் மருத்துவர்களே சான்றிதழ் வழங்கலாம். உடலில் வெளிப்படையாகத் தெரியாத ஊனமாக இருந்தால் மட்டுமே மருத்துவ வாரியத்திடம் சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்த நாளில் இருந்து 7 நாள்களுக்குள் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். சில தவிர்க்க முடியாத காரணமாக இருந்தாலும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகக்கூடாது என்று கூறியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு கடன்: நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 1,40,298 தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி, வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் திங்கள்கிழமை மத்திய சமூக நீதி இணை அமைச்சர் நெப்போலியன் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக குடும்பத்தினர் பயன்பெற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் 31,340 குடும்பங்கள், கர்நாடகத்தில் 30,517 குடும்பங்கள், மகாராஷ்டிரத்தில் 29,097 குடும்பங்களுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்
Read more

வேலைவாய்ப்பு புதுப்பித்தல்: மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு

சென்னை : வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் புதுப்பிக்க தேவையில்லை என, அரசு அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பு துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கணினி ஒருங்கிணைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,
மாற்றுத் திறனாளிகளான அனைத்து பதிவுதாரர்களுக்கும் அதாவது, பார்வையற்றோர், செவி இழந்தோர், வாய் பேசாதோர், மனநலம் குன்றியோர், உடல் உறுப்பு பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பித்தல் செய்வதில் இருந்து விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Read more

டிச., 3 மாற்றுத் திறனாளிகள் தினம் மாநில விருதுகளுக்கு வரவேற்பு

டிசம்பர் 3ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியவர்கள் மாநில விருதுகள் பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழகத்தில் டிசம்பர் 3ம் தேதி மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத் திறன் படைத்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களும்,
அவர்களுக்காக சேவை புரிந்தோருக்கு மாநில விருதுகளும் வழங்கப்படும்.மிகச் சிறப்பாக பணியாற்றி சுயதொழில் புரிந்து வரும் மாற்றுத் திறனாளிகள், மிகச் சிறந்த முறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியர்கள், மிகச் சிறப்பாக மறுவாழ்வு உதவிகளை அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள், சமூகப் பணியாளர்கள், அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கி வரும் தொழில் நிறுவனங்கள், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும்.இவ்விருதுகளுக்காக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, இம்மாதம் 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது சென்னையில் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்திலோ கிடைக்கும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more

வன்செயலால் பாதித்த மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு


திருச்சி: "திருச்சி மாவட்டத்தில் வன்செயல்களால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது,' என கலெக்டர் சவுண்டையா தெரிவித்துள்ளார்.


அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் வன்செயல்களால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வாரிசுக்கு 10 ஆயிரம் ரூபாயும்,
வன்செயல்களால் காயமடைந்த மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 5,000 ரூபாயும் நிதியுதவியாக வழங்கப்படும். வழக்கு சம்பந்தமாக ஒருமுறை நீதிமன்றத்துக்கு செல்ல 200 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.


ஒரு வழக்குக்கு அதிகப்பட்சமாக 2,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும். அதேபோல், மாற்றுத்திறனாளிகளின் வழக்குகளில் இலவசமாக சேவை செய்யும் வக்கீலுக்கு பயணப்படி 500 ரூபாய் வழங்கப்படும். வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராக 300 ரூபாய், காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி போலீஸ் ஸ்டேஷன் மற்றும் நீதிமன்றத்தின் விசாரணையின் போது அவர்களது சைகை மொழியினை மொழிபெயர்க்கும் சிறப்பாசிரியருக்கு (பயணப்படி மற்றும் தினப்படி சேர்க்காமல்) ஒரு முறை வருவதுக்கு 300 ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.


இத்திட்டத்தில் பயனடைய மாற்றுத்திறனாளி விபத்து சம்பந்தமாக முதல்வர் நிவாரண உதவியோ அல்லது வேறுஉதவித்தொகையோ பெற்றிருக்க கூடாது. திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் வன்செயல்களால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, "மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுலகம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புறம், சார்நிலை கருவூலம் அருகில் கண்டோன்மெண்ட், திருச்சி' என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read more

இலவச சீருடை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கும் விழா

           திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் மற்றும் நேயம் அறக்கட்டளை இணைந்து மாற்றுத் திறனுடைய மாணவ
மாணவியர் மற்றும் மாற்றுத் திறனுடையோரின் குழந்தைகளுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா திருச்சி, மரக்கடை,  சையது முர்துசா பள்ளியில் நடைபெற்றது.



     இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளிமாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் மாரிக்கண்ணன் வரவேற்புரையாற்றினார்.
   
     நேயம் அறக்கட்டளையின் தலைவர் மணியன் தலைமையுரையாற்றினார். திருச்சி தொழிலதிபர் எஸ்.பிரதீப், சமூக ஆர்வலர் ஆர்.சுரேஷ் மற்றம் நாகநாதர் உணவகத்தின் மேலாளர் ஏ.ரவி ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்துகொண்டனர்.

     திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியை டாக்டர். பவித்திரா, திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தின் மேலாளர். மு.இராதாகிருஷ்ணன், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையைச் சார்ந்த கே.சரவணன், அரசு பள்ளியின் ஆசிரியர் ஜா.கிஷோர்டேவிட் மற்றும் திருச்சி ஆர்.எம்.எச் கார்பரேசன் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.விக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     ஆர்.பாக்கியராஜ், இரா.சுப்பிரமணியன், தேவராஜன், பாலகிருஷ்ணன், கிளமண்ட் மற்றும் மணவாளன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், பொருளாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.
Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் சலுகை : அசம்பாவிதங்களில் நிதி உதவி


சிவகங்கை : அசம்பாவிதங்களால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு, நிதி மற்றும் சட்ட உதவி அளிக்கும் திட்டத்தை, அரசு செயல்படுத்த உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஓதுக்கீடு, போக்குவரத்து வசதி உள்ளிட்ட சலுகைகளை, அரசு வழங்கியுள்ளது. இவர்களின் மீது நடக்கும் தாக்குதல், பாலியல் பலாத்காரத்தால் பலர் உயிர் இழக்கின்றனர். சட்டரீதியான தீர்வு கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
புது திட்டம்: இதை தவிர்க்க,
இவர்களுக்கு நிதி, சட்ட உதவி அளிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி அசம்பாவிதம் அல்லது விபத்தால் பாதிக்கப்படுவோருக்கு உதவ, கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்படும். இதில் மாவட்ட எஸ்.பி., உறுப்பினராகவும், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி செயல் அலுவராகவும் செயல்படுவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்க, இக்குழு அரசுக்கு பரிந்துரைக்கும்.
நிதி: கொலையாகும் மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்; விபத்தில் அதிக காயம் அடைந்தால் 5,000; பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 5,000 வழங்கப்படும். கோர்ட்டுக்கு சென்று வர போக்குவரத்து செலவு, ஒரு முறைக்கு 200 ரூபாய் (அதிகபட்சம்); வழக்கு செலவாக 2,000; வக்கீல்களுக்கு, ஒரு அமர்வுக்கு 300 ரூபாய் வழங்கப்படும். காது கேளாதவர்களுடன் கோர்ட்டுக்கு வரும் உதவியாளருக்கு, ஒவ்வொரு முறையும் 300 ரூபாய் வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Read more

பார்வையற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள்: ஜப்பானிய துணை தூதர் தகவல்


சென்னை : ""உலகில் உள்ள பார்வையற்றவர்களில் மூன்று ஒரு பங்கினர் இந்தியர்கள்,'' என ஜப்பானிய துணைத் தூதர் தெரிவித்தார்.கண்ணின் விழி வெண்படலம் எனப்படும் கார்னியாவில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளால், பார்வையிழப்பு ஏற்படுகிறது.இதன் மூலம் ஏற்படும் பார்வையிழப்பை தடுக்க, நோயாளியிடமிருந்தே மூலச் செல்களை உருவாக்கி அதை சிகிச்சைக்கு பயன்படுத்தும் புதிய முறையை, சென்னை
சங்கர நேத்ராலயாவின் பார்வை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்து சாதனை படைத்துள்ளது. 

இதற்கு தற்போது காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.இந்த ஆராய்ச்சி, சங்கர நேத்ராலயா மைக்ரோ பயாலஜி துறையின் இயக்குனர் மாதவன் தலைமையிலான குழு, டாக்டர் சாமுவேல் ஆப்ரகாம் தலைமையிலான இந்தோ - ஜப்பானிய கூட்டமைப்பு மற்றும் ஜப்பான் வாசோ பல்கலை பாலிமர் சயின்ஸ் பேராசிரியர் யூயிச்சி மோரி, டாக்டர் ஹிரோஷி யோசியோகா குழுவினர் இணைந்து நிகழ்த்தியுள்ளனர்.உலகிலேயே முதன் முறையாக, சிந்தெடிக் பொருளை பயன்படுத்தி, கார்னியாவின் ஆதார மூலச் செல்லை தனியே வளர்த்து, அதை பாதிக்கப்பட்டவரின், கார்னியா செல்லுக்கு மாற்றாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், வைரஸ் மற்றும் இதர அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் நோய்த் தொற்றுகளை தடுக்க முடிகிறது. புதிய கண்டுபிடிப்பின் மூலம் கார்னியாவில் உருவாகும் பாதிப்புகளால் ஏற்படும் பார்வையிழப்புகளை வெகுவாகக் குறைக்க முடியும். இந்த கண்டுபிடிப்பிற்கு ஜப்பான் - இந்தியா கூட்டு காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது.புதிய கண்டுபிடிப்பு குறித்து விளக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், இந்தியாவிற்கான ஜப்பான் துணைத் தூதர் டக்காய்குய் கிட்டகோவா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசியதாவது:இத்தகைய கூட்டு முயற்சி பாராட்டத்தக்கது. இது போன்ற ஆராய்ச்சிகளும், முயற்சிகளும் எதிர்காலத்திலும் தொடர வேண்டும். உலகில் நான்கரை கோடி பார்வையற்றவர்கள் உள்ளனர். இதில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்கள்; இதில், பெரும்பான்மையானவர்கள் 45 வயதிற்கு குறைவானவர்கள்.அவர்களுக்கு இத்தகைய ஆராய்ச்சிகள் உதவிகரமாக அமையும். சென்னை நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது.இங்கு பல்வேறு தொழில்களும் பெருகி வருகின்றன. இங்கு மருத்துவம் சார்ந்த தொழில்களும் அதிகம் வளர்ந்து, சென்னை இந்தியாவின் பிலடெல்பியா நகராக உருவாக வேண்டும்.இவ்வாறு ஜப்பான் துணைத் தூதர் பேசினார்.விழாவில், சங்கர நேத்ராலயா தலைவர் வைத்தியநாதன், முன்னாள் தலைவர் பத்ரிநாத், மைக்ரோ பயாலஜி துறை இயக்குனர் மாதவன், என்.சி.ஆர்.எம்., இயக்குனர் சாமுவேல் ஆப்ரகாம், டாக்டர் மீனாட்சி, டாக்டர் பாஸ்கர் சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்."புதிய கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளதால், வெகு விரைவில், கார்னியா செல் வளர்ப்பு முறையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை துவங்கும்' என டாக்டர் மாதவன் தெரிவித்தார்.


Read more

சினிமாவில் மாற்றுத்திறனாளிகள் :தலைவர் ஆதங்கம்

சேலம்: ""சினிமாவில் மாற்றுத்திறனாளிகள் இழிவுப்படுத்தப்படுவதை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று தமிழ்நாடு மாற்று திறனாளர்கள் நல்வாழ்வு சங்க தலைவர் வரதகுட்டி கூறினார்.சேலம் நேஷனல் ஹோட்டலில் நேற்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளர்கள் நல்வாழ்வு சங்கத்தின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு, சங்க மாநில தலைவர் வரதகுட்டி, நிருபர்களிடம் கூறியதாவது: செப்டம்பரில் சென்னையில்
மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடக்கிறது. அதில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி ஆகியோருக்கு பாராட்டு விழா நடக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இன்ஜினியரிங் பாடப்பிரிவில் மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் சீட் 3,000 ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 323 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். காலியாக உள்ள இன்ஜினியரிங் சீட்டுக்களை மாற்று திறனாளிகளின் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். கடந்த ஆண்டு மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய உயர் மட்டக்குழுவை அரசு நிர்ணயம் செய்தது. குழுவின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்று திறனாளிகள் சினிமாவில் இழிவுபடுத்தப்படுவதை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு தங்கும் விடுதியுடன் அரசு பள்ளி ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மாநில துணை தலைவர் நந்தகுமார், பொதுச்செயலாளர் மருதமுத்து, பொருளாளர் ரவி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Read more

100 மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் மலர்ந்தது வசந்தம்

நாமக்கல், ஜூலை 10: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு முன்னோடியாக நாமக்கல்லில் ஊன்றுகோல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்கட்டமாக 100 மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் வசந்தம் பிறந்துள்ளது.


÷மாற்றுத் திறனாளிகளாக உள்ள நபரை ஆரோக்கியமான நிலையில் உள்ள நபர் ஒருவர் நண்பராக ஏற்று, மாற்றித் திறனாளிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்குவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். பொருளுதவி மட்டுமின்றி, கல்வி கற்பதில் உதவி, வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல், அரசின் சலுகைகள் மற்றும் இதர பயன்பாடுகளை பெற்றுத் தருவதில் உதவி, தினமும் தொலைபேசியில் உரையாடல், வாரம் ஒரு முறை நேரில் சந்திப்பு, மாதம் ஒருமுறை அனுபவப் பகிர்வு என மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு வகையிலும் உதவிகளைப் பெற்றுத் தருகிறது இத் திட்டம்.

÷இதன் முதல்கட்டமாக 100 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆட்சியர் முதல் தொழிலாளி வரையில் 100 நபர்கள் உதவ முன்வந்துள்ளனர். குழந்தை நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி முதல் முதியோர் வரையிலான மாற்றுத் திறனாளிகள் பயன்பெறுகின்றனர்.  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சகாயம், வெண்ணந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து 10-ம் வகுப்பில் 493 மதிப்பெண் பெற்ற கதிர்வேல் என்ற மாணவரை நண்பராக ஏற்றுள்ளார். இந்த மாணவர் தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இதேபோல், மாவட்ட வருவாய் அலுவலர் கி. சாந்தி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர், விவசாயிகள், தொழிலாளர்கள் என 100 பேர் முன்வந்து 100 மாற்றுத் திறனாளிகளை தனது நண்பர்களாக ஏற்றுள்ளனர். ÷இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்கும் வகையிலான நிகழ்வு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. நண்பராக ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக ஒவ்வொருவரும் மாற்றுத்திறனாளிகளின் கையில் ராக்கி கயிறு கட்டினர். மேலும், ஊன்றுகோல் திட்டத்தில் நண்பராக ஏற்றுள்ள மாற்றுத் திறனாளியின் இன்பத்திலும், துன்பத்திலும் நல்ல தோழனாக இருந்து, அவர் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையவும், சாதனை படைக்கவும் உறுதுணையாக இருப்பேன் என 100 பேரும் உறுதிமொழி ஏற்றனர்.

÷ நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் முன்னாள் இணை இயக்குநர் ஆர்.பி. இளங்கோ, பயிற்சி துணை ஆட்சியர்கள் கவிதா, செங்கோட்டையன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் விஜயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு ஏர்டெல் உதவி

சென்னை, ஜூலை 10: சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் 40 பேருக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில், ஒரு ரூபாய் நாணயம்போட்டு பேசும் தொலைபேசிகளை ஏர்டெல் நிறுவனம் இலவசமாக அளித்துள்ளது.


இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிறுவன செல்பேசி சேவைப் பிரிவு தலைவர் என். ஸ்ரீனிவாசன் கூறியது:

மாற்றுத் திறனாளிகளுக்கு வருவாய் வாய்ப்பை அளிப்பதோடு, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்காக 40 பேருக்கு இதுபோன்று தொலைபேசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இது அவர்களுடைய வாழ்வில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்
Read more

அழகப்பா பல்கலைக்கழக கல்வி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் ரத்து

தூத்துக்குடி, ஜூலை 6: அழகப்பா பல்கலைக்கழக தூத்துக்குடி கல்வி மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


 இது தொடர்பாக இக்கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பி. கதிரேசபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 தூத்துக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக கல்வி மையத்தில் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.   இப்பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்திற்கு இணையாக அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளான பி.ஏ. (வரலாறு, பொது நிர்வாகம்), பி.பி.ஏ., பி.லிட்., பி.காம்., பி.சி.ஏ., பி.எஸ்ஸி. (கணிதம், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்) போன்ற படிப்புகளுக்கும், முதுகலை படிப்புகளான எம்.ஏ. (தமிழ், ஆங்கிலம், வரலாறு), எம்.காம்., எம்.எஸ்ஸி., எம்.பி.ஏ., போன்ற படிப்புகளுக்கும் தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.  இங்கு மாற்றுத் திறனாளிகளுக்கு கல்விக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.  பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் தூத்துக்குடியில் நடைபெறுகிறது என்றார் அவர்.
Read more

மாற்று திறனாளிகளுக்கான நேர்காணல்

தஞ்சாவூர், ஜூலை 6: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான நேர்காணல் அண்மையில் நடைபெற்றது.


   மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான வயது வரம்பை தளர்த்திடும் நோக்கில், இந்த நேர்காணல் நடைபெற்றது. இதில் திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு ஒன்றியங்களைச் சேர்ந்த 36 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கு. கலியமூர்த்தி நேர்காணல் நடத்தினார்.    மாற்றுத் திறனாளிகளை மருத்துவர்கள் திருமலைப்பாண்டியன், அமுதவடிவு, பாலசுப்பிரமணியன், பாபுபாலசிங்கம் ஆகியோர் பரிசோதித்தனர்.

   மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். சுரேஷ்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிக்குமார் (சமூகப் பாதுகாப்பு), ஒரத்தநாடு வட்டாட்சியர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Read more

14 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி பொருத்திய மோட்டார் சைக்கிள்கள்

கிருஷ்ணகிரி, ஜூலை 6  கிருஷ்ணகிரியில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.48 லட்சம் மதிப்பிலான பேட்டரி பொருத்திய மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு இவற்றை மாவட்ட ஆட்சியர் வி.அருண்ராய் வழங்கினார்.  கூலியத்தைச் சேர்ந்த மணிலா, பெருகோபனப்பள்ளி தரன், கிருஷ்ணகிரி வெங்கடேசன், பெத்தனப்பள்ளி வெங்கடப்பன், ஊத்தங்கரை சத்தியபோஸ், நலகுண்டலப்பள்ளி ஈஸ்வரி உள்ளிட்டோர் இவற்றைப் பெற்றனர்.

 நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.பிரபாகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.மணிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
Read more

மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை உடனுக்குடன் பரிசீலிக்க வேண்டுகோள்


விழுப்புரம், ஜூலை 5 மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட உடல் ஊனமுற்றோர் சமூக சேவை நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

÷சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் பொறியாளர் மு.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

÷மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு 15-ம் தேதி தன்னம்பிக்கை விருது வழங்குவது, சேலத்தில் 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வது, விரைவு ரயில்களில் தனி வசதிகள் கொண்ட முன்பதிவற்ற ரயில்பெட்டிகள் இணைக்கப்படும் என்று அறிவித்த அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

÷கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் சென்னகுணம் சிவக்கொழுந்து வரவேற்றார், நிர்வாகிகள் சக்திவேல், லட்சுமிபதி, வீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜோதி, வித்யா, முகுந்தன், பாஸ்கர், சரோஜா, ராஜாங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Read more

மாற்றுத் திறனாளிகள்அமைச்சர் மம்தா பானர்ஜிக்கும்,த்மிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிதுள்ளனர்.

திருச்சி, ஜுலை.4:

திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்க மாதாந்திரக் கூட்டம் மரக்கடை சையது முஸ்தபா பள்ளியில் நடைபெற்றது.

கூட்டதுக்கு மாவட்டச் செயலாளர் மாரிக்கண்ணன் தலைமை வகித்தர். அரசு ஊழியர் மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில இணைச் செயலாளா சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டதில் பல்வேறு சலுகைகள் மற்றம் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.



பின்னர்

1, இரயில் வண்டிகளில் மாற்றுத் திறனாளிகள் செல்ல் முன் பதிவு இல்லா பெட்டிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள இரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், அதற்கு பரிந்துரை செய்த த்மிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிப்பது,

2,மாற்றுத் திறனாளிகள் மனம் புண்படும் படி துக்ளக் இத்ழில் பேட்டி அளித்துள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி முருகனை கண்டிப்பது,

3,அடுத்த வாரம் மாற்றுத்திற்ன் மாண்வ, மாணவிகள் மற்றும் மாற்றுதிற்னாளிகளின் பிள்ளைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்குவது

உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட் துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, அரசு ஊழியர் மாற்றுத் திறனாளிகள்சங்க பொறுப்பாள்ர் பாக்யராஜ், ஒருங்கிணைப்பாளர் தேவராஜன், செயற்குழு உறுப்பினர்கள் மாரியபபன், லட்சுமணன், கண்ணன், சுபிரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Read more

மாற்றுத் திறனாளி திருமண நிதியுதவி ரூ.25 ஆயிரமாக உயர்வு

சென்னை, ஜூலை 3: மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவியை ரூ.20 ஆயிரத்தில் இருந்து, ரூ.25 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

2006-07-ம் நிதியாண்டு முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி திட்டங்களில் வழங்கப்படும் நிதியுதவியை ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது.

இதர திட்டங்களுடன் 2009-2010-ம் ஆண்டு மாற்றுத் திறனாளியைத் திருமணம் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் நீட்டித்து ஆணை வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு முதல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தில் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதால், மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் தொகையையும் ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என மே 15 ம் தேதி மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதில் ரூ.12,500 திருமண செலவிற்கு ரொக்கமாகவும், ரூ.12,500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவியைப் பொருத்தவரை தம்பதியரில் ஒருவர் மாற்றுத் திறனாளியான இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்பு மற்றும் கல்வித் தகுதி ஏதும் இல்லை.

சட்டப்பூர்வ திருமண வயதுடையவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் விண்ணப்பித்தால் திருமண நிதி உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி


மதுரை, ஜூலை 3: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டு, ஆனால் இரு கைகள் நல்ல நிலையில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பணிபுரியும் நபர்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்ற மாணவர்கள் தங்கள் பள்ளி முதல்வரிடமிருந்து படிப்புச் சான்றிதழுடனும், பணிபுரிவோர் தங்கள் நிறுவனத் தலைவரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழுடனும், வெள்ளைத் தாளில் விண்ணப்பம் எழுதி, வில்லாபுரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இது தொடர்பான மேல் விவரங்களுக்கு 2679695 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று, மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்
Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் - நெப்போலியன்

 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் - நெப்போலியன் விருதுநகர், ஜுலை.3 (டிஎன்எஸ்) விருதுநகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவது தொடர்பான சிறப்பு மதிப்பீட்டு முகாமை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிக்கும் துறை இணை அமைச்சர் து நெப்போலியன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார். மேலும் மாற்றுத் திறனாளிகளிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பிற்படுத்தப்பட்டோ ர் நலத்துறை அசைம்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் முனைவர் சே க சண்முகம், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ சுடற்கரைராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் பா கணேசன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஏ ஆர் ஆர் சீனிவாசன், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் வனராஜா ஆகியோர் பங்கேற்றனர். (டிஎன்எஸ்)

Read more

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி

புதுக்கோட்டை, ஜூலை 3: புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60 பேருக்கு கல்வி உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

ஆரோக்கியா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் இனியன் தலைமை வகித்தார்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் எஸ். ஜார்ஜ்தாஸ் முன்னிலை வகித்தார்.

கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் பெர்ணத்மேரி சூசைராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

விழாவில், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெர்ணத்மேரி சூசைராஜ் இந்த உதவிகளை வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயகுமார், ராமசாமி, மணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Read more
இலவச சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள் பெற அழைப்பு!
மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் முகாம் ஆதிநாத் ஜெயின் சேவ கேந்த்ரா சார்பில் விரைவில் நடைபெற்ற உள்ளது. இலவசமக வழங்கப்படும் இதனைப் பெற்று பயனடைய மாற்றுத் திறனளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இதுகுறித்து கேந்த்ரா நிர்வாகிகள் கூறுகையில் மாற்றுத் திறனாளிகள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஆதிநாத் ஜெயின் சேவ கேந்த்ரா அலுவலக
தொலைபேசி எண்: 044-26691616 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம் என்று கூறினர்
Read more

அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ்,மாற்றுத்திறன் படைத்த மாணவ, மாணவியர் சேர்க்கை

திருச்சி.ஜுலை,2, திருச்சி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ்,மாற்றுத்திறன் படைத்த மாணவ, மாணவியரை சாதாரண பள்ளியில் சேர்க்கும்திட்டத்தின் கீழ் இதுவரை ஆயிரத்து 557 மாணவரும், ஆயிரத்து 917 மாணவியரும்என மொத்தம் மூன்றாயிரத்து 474 பேர், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சேர்க்கப்பட்டுள்ளனர். அதில், 476 பார்வை குறையுடையவர், 142 பார்வையற்றோர், 432 காதுகேளாதோர், 255 காது கேளாத, வாய்பேச இயலாதோர், ஆயிரத்து 38கை,கால் செயலிழந்தோர், ஆயிரத்து 105 மனவளர்ச்சி குன்றியோர், 26 பல்வகை மாற்றுத்திறனாளிகள் அடங்குவர்.

மாற்றுத்திறன் படைத்த மாணவர் அனைவரும் இயல்பான கல்வி முறை அல்லது உள்ளார்ந்த கல்வி முறை திட்டங்களில் 100 சதவீதம் சேர்பபதுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுக்கு ஆதாரமாக, திருச்சி குமரன் நகர் சிவானந்தா பாலாலயா பள்ளியில் மாற்றுத்திறனாளிகளின் சேர்க்கையை,போக்குவரத்துதுறை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.

கலெக்டர் (பொ) தட்சிணாமூர்த்தி, மேயர் சுஜாதா, எம்.எல்.ஏ.,க்கள் அன்பில் பெரியசாமி, சேகரன், சௌந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சியாமளா, பள்ளி தாளாளர் மீனாட்சி, கமிட்டிஉறுப்பினர் இந்திரா, முதல்வர் சசிகலா உட்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு முகாம் துவக்கத்தை தொடர்ந்து, பள்ளி செல்லா மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்துபள்ளியில் சேர்க்க, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சியாமளா, எஸ்.எஸ்.ஏ.,கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அகஸ்டின் பீட்டர் பாத்திமா, உதவித்திட்டஅலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் மேலும் பல சிறப்பு முகாம்களை ஏற்பாடுசெய்கின்றனர்.

Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வேலைவாய்ப்பு முகாம்: மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் பேச்சு

அரியலூர், ஜூலை2: தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாகவும், முதல் கட்டமாக திருநெல்வேலியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 160 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணை அமைச்சர் து. நெப்போலியன் தெரிவித்தார்.

அரியலூரில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தனியார் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு சிறப்பு முகாமை புதன்கிழமை தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி 3 சதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தற்போது இது கண்காணிக்கப்பட்டு, அனைத்துத் துறைகளிலும் 3 சதம் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இது தனியார் துறையிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான், இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

முதல் கட்டமாக, திருநெல்வேலியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 160 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அரியலூரில் தற்போது நடைபெறும் முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகை 2 கோடியாகும். ஆனால், இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் மொத்த எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டும்.

தமிழக முதல்வர், மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக ஒரு துறையை ஏற்படுத்தி, அவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றார் நெப்போலியன்.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் தலைமை வகித்தார்.
Read more

மாற்றுத் திறனாளர்கள் காப்பகத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி உதவி


திருச்சி, ஜூலை 2: திருச்சி மாவட்டம், நவல்பட்டு பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வங்கிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத் திறன் உள்ள குழந்தைகளுக்கு நல உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நவல்பட்டு அண்ணாநகர் பாரத ஸ்டேட் வங்கி, வங்கிகள் தினத்தை செம்பட்டு ஜே.எம்.ஜே. மாற்றுத் திறனுள்ள குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடியது.

இந்தக் காப்பகத்தில் உள்ள மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான பொருள்களை இலவசமாக பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது.

நிகழ்ச்சியில் வங்கி மேலாளர் கே. பந்தேநாவஸ், காப்பகத்தின் மேற்பார்வையாளர் லூபினி, வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, நவல்பட்டு காவலர் குடியிருப்பில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற ராஜேஸ்வரி, செய்யதுஅஜீஸ் ஆகியோருக்கு வங்கி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
Read more

மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 34 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.

முதல் நாள் கலந்தாய்வில்    எம்.பி.பி.எஸ். படிக்க    78 பேர் தேர்வு
சென்னை, ஜூலை 2-
சென்னை உள்பட 14 அரசு மருத்துவ கல்லூரிகளின் 1398 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி அரங்கில் ஜுன் 28 தொடங்கியது. மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 34 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.

விளையாட்டு பிரிவில் 3 பேருக்கும், முன்னாள் ராணுவ வீரர் குழந்தைகள் பிரிவில் 2 பேருக்கும் அனுமதி கடிதம் வழங்கப்பட்டன.
ரேங்க் பட்டியலில் 200க்கு 200 பெற்று சிறப்பிடம் பெற்ற 12 பேருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சென்னை மருத்துவ கல் லூரியில் சேருவதற்கான சேர்க்கை கடிதத்தை வழங்கினார். அனைத்து பிரிவைச் சேர்ந்த 78 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு கல்லூரியில் சேருவதற்கான சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.

ரேங்க் பட்டியலில் இடம் பெற்ற மாணவி அபிநயா, மற்றொரு மாணவி ஆகிய 2 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. இதனால் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இந்த ஆண்டும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
கலந்தாய்வு தொடங்கிய சிறிது நேரத்தில் சென்னை மருத்துவ கல்லுரியில் உள்ள அனைத்து பிரிவினருக்கான 44 இடங்களும் நிரம்பின. ரேங்க் பட்டியலில் இடம் பெற்ற 12 மாணவ- மாணவிகளும் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. அனைத்து பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது.
ரேங்க் பட்டியலில் 80-வது ரேங்க் (கட்-ஆப் மதிப்பெண் 199.25) முதல் 499-வது ரேங்க் (கட்-ஆப் மதிப்பெண் 197.75) வரை உள்ள 420-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள். ஜூலை 2-ந்தேதி வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது.
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 4 தனியார் கல்லூரிகள் புதிதாக தொடங்க அனுமதிக்காக காத்திருக்கின்றன. வண்டலூர் தாகூர் மருத்துவ கல்லூரி, திருவேற்காடு ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவ கல்லூரி ஆகியவை தலா 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களை சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதியை ஏற்கனவே கோரியுள்ளன. இந்த கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 சதவீத இடங்கள் கிடைக்கும்.
இவை தவிர சேலத்தில் ஸ்ரீ அன்னபூரணி மருத்துவ கல்லூரி, சென்னை அருகே திருவள்ளூரில் டி.டி.நாயுடு மருத்துவ கல்லூரி ஆகியவை புதிதாக இந்த ஆண்டு தொடங்கப்படுகின்றன.
மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்து சென்றனர். ஸ்ரீவிநாயகா மிஷன் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்படும் ஸ்ரீஅன்னபூரணி மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களை சேர்க்க அனுமதி கோரியுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட இந்த கல்லூரி அனுமதி கோரியுள்ளதால் ஒப்புதல் கிடைக்கும் நிலையில் உள்ளது. இதன் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 97 இடங்கள் கிடைக்கும்
Read more

கலெக்டர் அலுவலகத்தில் "ரேம்ப்' வசதி மாற்று திறனாளிகள் கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர்: ஜூலை.1. "மாற்று திறனாளிகளுக்கு வசதியாக, கலெக்டர் அலுவலகத்தில் "ரேம்ப்' வசதி, சிறப்பு கழிப்பறை வசதி மற்றும் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்' என, மாற்று திறனாளிகளுக்கான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாவட்ட மையம், திருப்பூரில் துவக்கப்பட்டது. இதன் துவக்க விழா, எம்.சி., மஹாலில் நடந்தது; மாநில அமைப்பாளர் லட்சுமணன் தலைமை வகித்தார்.அப்போது, "காதுகேளாதோர், வாய்பேச இயலாதோர், உடல் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு உடையவர்கள், மங்கலான பார்வை உடையவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், மூன்றடி இரண்டு அங்குலத்துக்கு குறைவான உயரம் உள்ளவர்கள், இச்சங்கத்தில் உறுப்பினராக இணையலாம்' என அறிவிக்கப்பட்டது."மாற்று திறனாளிகளுக்கு என தனி குறைதீர்ப்பு முகாம் நடத்த வேண்டும்; அடையாள அட்டை பெறுவது உள்ளிட்ட ஒவ்வொரு தேவைக்கும் கலெக்டர் அலுவலகத்துக்கு வர வேண்டியுள்ளது. போக்குவரத்துக்கு உதவியாக ஒன்றிய அளவில் முகாம் நடத்த வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் "ரேம்ப்' வசதி, சிறப்பு கழிப்பறை வசதி, இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.திருப்பூர் மாவட்ட மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான மைய அமைப் பாளராக ரங்கராஜ் தேர்வு செய்யப்பட்டார். மாநில துணை அமைப்பாளர் நம்பிராஜன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Read more

மாற்று திறனாளிகள் செல்ல புதிய பாதை

ஈரோடு ஜூலை.1 : மாற்று திறனாளிகள் அலுவலகம் செல்வதற்காக புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் மாற்று திறனாளிகள் அலுவலகம் உள்ளது. பல்வேறு நலத்திட்டங்களுக்கு மாற்று திறனாளிகள் விண்ணப்பம் கொடுக்கவோ, நலவாரிய அட்டை பெறவோ இங்குதான் வர வேண்டும். சமீபத்தில் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வளாகம் முழுவதும் தார் ரோடும் பணி நடந்துள்ளது. ஆனால், கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்துக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் அடர்ந்த செடி, கொடிகள் வளர்ந்து பாதை தாறுமாறாக இருந்தது. இவ்வழியே செல்ல முடியாமல் மாற்று திறனாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். இப்பிரச்னையை "காலைக்கதிர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இந்த இடத்தையும் தூர் வாரி, தாங்கள் எளிதாக செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் எனக் கோரி மாற்று திறனாளிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுவை பரிசீலனை செய்த கலெக்டர் தார் சாலை அமைக்க உத்தரவிட்டார். இதன்படி, மாற்று திறனாளிகள் அலுவலகம் செல்லும் வழியில் இருந்த புதர்கள் புல்டோசர் மூலம் அகற்றப்பட்டன. மாற்று திறனாளிகள் தங்கள் வாகனத்தில் எளிய முறையில் செல்ல தார் சாலை அமைக்கப்பட்டது. நேற்று முதல் இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தது. இதையறிந்த மாற்று திறனாளிகள் கலெக்டர் சுடலைகண்ணனை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தனர்.

Read more

செம்மொழி மாநாடு முதல்வருக்கு மாற்று திறனாளிகள் பாராட்டு

சென்னை, ஜூலை.1
தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளர் அரசு பணியாளர் ஒன்றியத்தின் மாநில தலைவர் ஆவின் கோபிநாத் முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உலகமே வியக்கும் வண்ணம் நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் மாற்றுத்திறன் படைத்தவர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தி தந்து மாற்றுத் திறனாளிகள் கஷ்டப்படாத வாறு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன.

5 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளித்து பங்கேற்க செய்த மைக்காக முதல்-அமைச்சர் கலைஞருக்கும், துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், கனிமொழி எம்.பி.க்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
Read more

மனநலன் குன்றியோர் நலன்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?


திருச்சி,​​ ஜூன் 29
மனநலன் குன்றியோரின் நலனுக்காக கூடுதலாக சிறப்புப் பள்ளிகள்,​​ காப்பகங்கள் தொடங்கப்பட வேண்டும்.​ மேலும்,​​ அவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து,​​ வேலைவாய்ப்பை அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.​ ​

​ ​ ​ உடல் ஊனமுற்றோர்,​​ மனநலன் குன்றியோர்,​​ கண் பார்வையற்றோர்,​​ காது கேளாதோர்,​​ வாய் பேச முடியாத குறைபாடு உடையோர் எனப் பல்வேறு வகையான உடல் ஊன குறைபாடுகளைக் கொண்டோர் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தனர்.

​ ​ ​ ​ இவ்வாறு அழைக்கப்பட்டு வருபவர்கள் அனைவரும் இனி மாற்றுத் திறனாளிகள் என்றே அழைக்கப்படுவர் என,​​ தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் அறிவித்தார் முதல்வர் கருணாநிதி.

​ ​ ​ அந்த அறிவிப்போடு அவர் நின்றுவிடாமல்,​​ முன்பு உடல் ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத் துறை என்றழைக்கப்பட்டு வந்த துறையை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை எனப் பெயர் மாற்றம் செய்து,​​ அத் துறையை தானே நிர்வகித்து வருகிறார்.

​ ​ ​ ​ தற்போது தமிழக மொத்த மக்கள் தொகையில் 2.5 சதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

​ ​ ​ ​ மாற்றுத் திறனாளிகள் பிரிவில் ஒன்றாகக் கருதப்படும் மனநலன் குன்றியோர் பல்வேறு நிலைகளில் உள்ளனர்.​ கல்வி கற்கக் கூடியவர்கள்,​​ பயிற்சி பெறக் கூடியவர்கள்,​​ பராமரிக்கப்பட வேண்டியவர்கள் எனப் பல்வேறு நிலைகளில் அவர்கள் இருக்கின்றனர்.​ ​

​ ​ ​ ​ ​ ​ ​ சென்னை குரோம்பேட்டையில் மனநலன் குன்றியவர்களுக்காக சிறப்புப் ​ பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.​ இதுமட்டுமல்லாமல்,​​ மனநலன் குன்றியவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்களின் மூலம் மாநிலம் முழுவதும் 10 மையங்களை அரசு நடத்தி வருகிறது.

​ ​ ​ ​ ​ இந்த மையங்களுக்குத் தேவையான நிதியையும் அரசு ஒதுக்குகிறது.​ இதுமட்டுமல்லாமல்,​​ மனநலன் குன்றிய குழந்தைகளின் பெற்றோருக்கு மாதம் ரூ.​ 500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

​ ​ ​ ​ ​ ​ இந்நிலையில்,​​ மனநலன் குன்றிய குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலை தற்போது அவர்களின் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.​ அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

​ ​ ​ ​ ​ மனநலன் குன்றிய நிலையில் பிறக்கும் குழந்தைகளை மையங்களில் சேர்த்து விடுகிறோம்.​ குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் படித்து முடித்து விடுகிறார்கள்.​ அதன் பின்னர்,​​ அவர்களது நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

​ ​ ​ ​ அரசு சார்பில் சிறப்பு தொழில் மையங்களை உருவாக்கி,​​ மனநலன் குன்றியவர்களின் திறனுக்கேற்ப தொழில் பயிற்சியை அளித்து,​​ அவர்களின் வாழ்க்கை மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் மனநலன் ​ குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள்.

​ ​ ​என்ன செய்ய வேண்டும் அரசு:​​ மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் சார்பில் 48 விதமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.​ உயர் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ,​​ மாணவிகளுக்கான தனிக் கட்டணத்தைக் கூட ரத்து செய்து அண்மையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.​ ​

​ ​ ​ ​ இதுமட்டுமல்லாமல்,​​ மாற்றுத் திறனாளிகள் 100 பேருக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.​ பூந்தமல்லி அரசு பார்வையற்றோர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் படித்த 72 பேரில் தகுதியுள்ள 60 பேருக்கு ஆசிரியர் பணி நியமனமும் அண்மையில் வழங்கப்பட்டன.​ இவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்கு திமுக அரசு பல்வேறுவிதமான சலுகைகளையும்,​​ நலத் திட்டங்களையும் வழங்கி வருகிறது.

​ ​ ​ ​ மனநலன் குன்றியவர்கள் கல்வி கற்க சிறப்புக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்,​​ அந்த கல்வி வரைமுறைப்படுத்தப்பட வேண்டும்.​ ​ இந்தக் கல்விக்கான பாடத் திட்டத்தை அரசே வழங்க வேண்டும்.​ கல்வி வழங்கிய பிறகு அவர்கள் தங்குவதற்கு காப்பகம் அமைக்கப்பட வேண்டும்.

​ ​ ​ ​ ​ ​ ​ கல்வியைப் பெற்ற மனநலன் குன்றியவர்கள்,​​ தங்கள் வாழ்க்கையை தாங்களே நடத்த முடியும் என்ற நிலையை உருவாக்கும் வகையில்,​​ அவர்களுக்கு தொழில் பயிற்சியை அளிக்கும் விதமாக சிறப்பு மையங்களை உருவாக்க வேண்டும் என்கிறார் திருச்சி இன்டேக்ட் சிறப்புப் பள்ளியின் இயக்குநர் தாமஸ் எபிநேசர்.

​ ​வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு இல்லை?:​​ மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சத இடஒதுக்கீடு வேலைவாய்ப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.​ இதில் கண் பார்வையற்றவர்கள்,​​ காது கேளாதவர்கள்,​​ உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு தலா ஒரு சதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.​ மனநலன் குன்றியவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடும் கிடைப்பதில்லை,​​ வாய்ப்பும் கிடைப்பதில்லை.

​ ​ ​ ​ வெளிநாடுகளில் உள்ளதுபோல,​​ உறுதிப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு என்ற பிரிவின் கீழ்,​​ மொத்தமுள்ள இடங்களில் 30 சதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்கிறார் தாமஸ் எபிநேசர்.

​ ​ ​ ​ ​ ​ மாற்றுத் திறனாளிகள் மீது அதிகம் அக்கறை கொண்டுள்ள தமிழக முதல்வர்,​​ மாநிலத்தில் அரசால் நடத்தப்படும் மனநலன் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளை மேலும் அதிகரிக்க வேண்டும்,​​ காப்பகங்களை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் மனநலன் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள்.
Read more

மாற்றுத்திறன் மாணவருக்கு கல்வி உதவித் தொகை


சென்னை,ஜுன்,30

மாற்றுத்திறன் படைத்த மாணவர்களுக்கு மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 500 பேருக்கு இந்த கல்வி உஹதவித் தொகை வழங்கப்படும்.

தொழில்கல்வி மற்றும் தொழிற்நுட்பக் கல்வி படிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதன்படி விடுதியில் தங்கிப் படிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு ரூ.1,000-மும், விடுதியில் தங்காத மாணவர்களுக்கு ரூ.700-ம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

அத்துடன் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.400-ம், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.700-ம் கல்வி உதவித் தொகை கிடைக்கும்.

கல்வி உதவி தொகையைத் தவிர்த்து, கல்வி கட்டணம் ரூ.10 ஆயிரம் திரும்ப வழங்கப்படும். மாற்றுத் திறன் படைத்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை குறித்து அறிவிப்பை, அந்தந்த மாநில அரசுகள் கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை மாநில அரசுகளை கேட்டு கொண்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாநில அரசுகளின் கல்வித்துறை தொடர்பான இணையதளங்களில், இதுபற்றிய விவரம் வெளியிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

இணையதள முகவரி: www.socialjustice.nic.in, www.nhfdc.or
g
Read more
Powered By Blogger
Powered by Blogger.

Followers